Thursday, April 28, 2011

உணவைப் படம் பிடித்து கலோரியை அளவிடும் புதிய i Phone Application! வியக்க வைக்கும் தொழிநுட்பம்



நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரி அளவைத் தெரிந்து கொள்வதற்கான புதிய i Phone Application ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஸா, சொக்கலேட், கேக் என எந்த வகை உணவாக இருப்பினும் சரி அந்த உணவை iPhone மூலம் படம் பிடித்தால் போதும் அதில் அடங்கியுள்ள உணவுக் கலோரியை அது அப்படியே அடுத்த நொடியில் விவரமாகத் தந்து விடும்.

mealsnap என்று இந்தப் பிரயோக முறை அழைக்கப்படுகின்றது. உடல் அரோக்கியம் தொடர்பான சமூக இணையத்தளமான dailyburn இதை உருவாக்கியுள்ளது. உணவு ஆரோக்கியம் பற்றிய இது போன்ற இனனும் பல iPhone பிரயோகங்களை ஏற்கனவே இந்த இணையம் அறிமுகம் செய்துள்ளது.

சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான உணவு வகைகளின் கலோரி விவரம் இந்த மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. சாப்பிடப்போகும் உணவை படம் பிடித்ததும்,இது எந்த வகையைச் சார்ந்தது என ஒப்பிட்டு அதன் கலோரி விவரங்களைத் துரிதமாகத் தந்துவிடும். உணவில் உள்ள புரோட்டீன்கள், விட்டமின்கள், கொழுப்பு என விவரங்கள் விலாவரியாகத் தரப்படும்.இந்த மென்பொருளின் விலை 2.99 டொலர்கள்

No comments:

Post a Comment