Tuesday, June 21, 2011

மீ யெல்ல கிராம முஸ்லிம்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர் அடாவடித்தனம்

ஜனாதிபதிக்கு கடிதம்: மாத்தறை மாவட்டத்தில் ஹக்மன தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரே முஸ்லிம் கிராமமான  மீயெல்ல முஸ்லிம்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மை இன வாலிபர்கள் சிலரின் அடாவடித்தனங்களுக்கு தொடராக இலக்காகி வருகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் அடாவடித்தனம் காரணமாக இரண்டு முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் , பெண்கள், பாடசாலை மாணவர்கள் என இக்கிராம மக்கள் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் . இந்த விடையம் தொடர்பாக மீயெல்ல கிராம முஹீதீன் ஜும்மாஹ் மஸ்ஜித் நிர்வாகம் தமது ஊர் முஸ்லிகளுக்கு பெரும்பான்மை வாலிபர்கள் சிலரினால் இழைக்கப்பட்டு வரும் துன்புறுத்தல்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர் விரிவாக
ஜனாதிபதி இந்த விடையத்தில் தலையிட்டு மீயெல்ல கிராம முஸ்லிம்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழும் வகையில் அமைதியான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தி தருமாறு அந்த கடிதத்தில் மஸ்ஜித் நிர்வாகம் வேண்டியுள்ளது
மீயெல்ல முஸ்லிம் கிராமத்தில் சுமாராக 380 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலான முறையில் பெரும்பான்மையின சிங்கள வாலிபர்கள் சிலர் திட்டமிட்ட அடிப்படையில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் தொழுகை முடிந்து வீடுகளுக்கு வருவோரின் தொப்பிகளை கழற்றி செல்லல் வீதியில் நடமாடுபவர்கள் மீது, சைக்கில் செயின் மற்றும் ஹெல்மெட்டினால் தாக்குதல் நடத்துதல் பாடசாலைக்கு பிஸ்ஸில் செல்லும் முஸ்லிம் மாணவ மாணவியர் மீது துன்புறுத்தல்களை மேற்கொள்ளல் முஸ்லிம் கடைகளில் சாமான்களை வாங்கிய பின்னர் பணம் கொடுக்காமல் மிரட்டிவிட்டு செல்லல் முஸ்லிம் பெண்கள் , சிறுவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டுதல் போன்றவை இடம்பெறுவதாக ஜனாதிபதிக்கு அனுபிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது

லண்டனில் இஸ்லாமிய சமூகப் புரட்சி: உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்

லண்டனில் இஸ்லாமிய சமூகப் புரட்சி: உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்


லண்டன் இஸ்லாமிய தவ்வா செண்டர் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யும் இஸ்லாமிய மாநாடு தற்போது லண்டன் தவ்வா செண்டரில் நடை பெற்றுகொண்டிருகின்றது அதில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இறுதி தூதரின் இனிய அழைப்பு – இஸ்லாமிய சமூக புரட்சி என்ற தலைப்பில் உரையாற்றி கொண்டிருகின்றார் என்று அங்கிருந்து அலி ரிஸான் அவர்கள் lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார்.
அங்கு உரையாற்றும் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதரின் அழைப்பு ஒரு முழுமையான சமூக புரட்சியாக இருந்தது என்றும் அல்லாஹ்வின் தூதர் ‘கூனு லாயிலாக இல்லலாஹ் துப்ளிஹூன் ‘ அல்லாஹ்வை தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை என்று ஏற்றுகொள்ளுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று மக்களை அழைத்தார்கள் அந்த வெற்றியின் ஒன்று மறுமையில் சுவர்க்கம் என்ற வெற்றி இரண்டாவது வெற்றி இந்த உலகில் நீங்கள் ஏற்றுகொள்ளும் இந்த கொள்கை நிலைநாட்டப்பட்டு நீங்கள் அரபிகளுக்கும் அஜமிகளுக்கும் ஆட்சியாளராக இருப்பீர்கள் என்பதாக இருந்தது என்று தெரிவித்தார் விரிவாக
இதுதான் அல்லாஹ்வின் தூதரின் அழைப்பாக இருந்தது இந்த சமூக புரட்சிக்கான அழைப்பை அன்றைய மக்கள் தெளிவாக விளங்கி கொண்டார்கள் வெறுமனே அவரின் அழைப்பு சில தனிநபர்களில் அவர்களின் வாழ்கையில் சில மாற்றங்கள் தோற்று விற்பதாக இருக்கவில்லை மாறாக ஒரு பாரிய சமூக மாற்றத்தை வேண்டியது என்று உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றும் போது அல்லாஹ்வின் தூதரின் அழைப்பில் இரண்டு பக்கங்கள் வெளிப்பட்டன ஒன்று இஸ்லாத்தை ஏற்றுகொண்டால் சுவர்க்கம் என்பதும் மற்றது பாரிய சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டமாகவும் இருந்தது ஒரு முறை மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சித்திரவதைகளை அனுபவித்து வந்த ஹப்பாப் இப்னு அரத் என்ற சஹாபி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எமக்காக அல்லாஹ்விடம்  உதவி புரியுமாறு வேண்ட கூடாத ? என்று வினவியபோது அதற்கு பதில் தெரிவித்த அல்லாஹ்வின் தூதர் நீங்கள் அவசர படுகின்றீர்கள் உங்களுக்கு முன்பிருந்தவர்கள் நிலத்தில் கால்கள் வரை புதைக்கப்பட்டு தலையில் இருந்து கால்கள் வரை இரண்டாக பிளக்கபட்டார்கள் ஆனால் அவர்கள் இஸ்லாத்தை கைவிடவில்லை உயிரை விட்டார்கள்.
மேலும் அந்த சித்ரவதைக்கு முகம் கொடுக்கும் ஹப்பாப் இப்னு அரத் என்ற தோழரிடம் ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்றார்கள் இந்த சம்பவம் அன்று அல்லாஹ்வின் தூதர் எந்த பலமும் இன்றி இருந்தபோதும் தனது தோழர்கள் சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க எந்த சக்தியும் இல்லாதபோதும் கூட சன்ஆவில் – தற்போதைய யெமன் நாட்டின் தலைநகர் – இருந்து பல ஆயிரக்கணக்கான மயில்கள் துரத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் சித்திரவதை பட்டு வரும் தனது தோழருக்கு ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்று தெரிவித்தமை அவர் சமூக புரட்சி ஒன்றை வேண்டி நின்றார் என்பதைத்தான் காட்டுகின்றது என்று தெரிவித்தார்.
இதை அல்லாஹ்வின் தூதர் சொல்லும் போது அன்று மக்காவில் முஸ்லிம்கள் அடிக்குமேல் அடி வாங்கிகொண்டிருந்தார்கள் தம்மை பாதுகாக்க கூட அவர்களிடம் எந்த பலமும் இருக்கவில்லை கவ்பாவுக்குள் 360 விக்ரகங்கள் இருந்தன அவற்றை எதுவும் செய்யமுடியாத மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர்.
அடிபட்டு சித்திரவதைகளை பெற்றுவரும் தோழரிடம் ஆயிரக்கணக்கான மையில்களுக்கு அப்பால் உள்ள சன்ஆவை பற்றி பேசுகின்றார் அன்று அரேபிய தேசம் கொள்ளை கொலை வழிப்பறி என்று அனைத்து குற்றங்களும்  நிறைந்து காணப்பட்டது தனது தோழர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருந்த அல்லாஹ்வின் தூதர் சித்திரவதை பட்டு வந்த தனது தோழரை தனக்கு முன் உக்காரவைத்து ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்று கூறியது அவர் பாரிய சமூக புரட்சியை சமூக மாற்றத்தி வேண்டிநின்றார் என்பதைத்தான் காட்டுகின்றது என்று தெரிவித்தார்
அதேபோன்று அல்லாஹ்வின் தூதர் கோத்திர தலைவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது இரண்டு விடயங்களை முன்வைத்தார்கள் ஒன்று நீங்கள் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவேண்டும் என்பதும் இரண்டாவது நீங்கள் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தை இந்த பூமியில் நிலைநாட்ட நீங்கள் எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதாகும் இந்த இவரின் அழைப்பை கோத்திர தலைவர்கள் அன்று தெளிவாக புரிந்து கொண்டனர்.
ஒரு முறை ஆமிர் இப்னு சஹ்ஸா என்ற கோத்திரத்தின் தலைவரை அழைத்து அல்லாஹ்வின் தூதர் நீங்களும் உங்கள் சமூகத்தவர்களும் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவேண்டும் என்றும் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தை இந்த பூமியில் நிலைநாட்ட நீங்கள் எனக்கு முழுமையாக உதவி புரியவேண்டும் என்று கோரினார்கள் அதற்கு தனது ஏனைய கோத்திர தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பதிலளித்த அந்த கோத்திர தலைவர் ஆம் நாங்கள் ஏற்றுகொள்கின்றோம் அனால் ஒரு நிபந்தனை உங்களின் மரணத்துக்கு பின்னர் தலைமைத்துவம் எங்களின் கோத்திரத்துக்கு தரப்படவேண்டும் என்று தெரிவித்தார் இந்த சம்பவங்கள் அல்லாஹ்வின் தூதர் பாரிய சமூக மாற்றத்தை நோக்கிய அழைப்பு விடுவதை அன்றைய மக்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதை காட்டுகின்றது என்று தெரிவித்தார் என்று அலி ரிஸான் தெரிவிக்கின்றார்.
இந்த மாநாட்டில் மேலும் மௌலவி உமர் சரீப் மற்றும் மௌலவி அப்துல் காதர் மதனி ஆகியோரும் உரையாற்றவுள்ளனர் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹாம் ப்லாஷேட் பாடசாலையில்  இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது மாநாட்டில் ஏராளமான தமிழ் பேசும் இலங்கை இந்திய நாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

துருக்கியில் இஸ்லாமிய அரசியல் தளம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது

M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: துருக்கியில் நேற்று இடம்பெற்ற 17 வது பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான AKP கட்சி மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்றுள்ளது நேற்று துருக்கியில் இடம்பெற்ற தேர்தலில் அர்பகான் தலைமையிலான ஆளும் தரப்பு பாரிய வெற்றியை பெற்றுகொண்டுள்ளது.
துருக்கியில் நேற்று 52,758,907 ஐந்து கோடி இருபத்தி ஏழு லட்சத்தி 58,907 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள் இவர்களில் 43,912,170 வாக்காளர்கள் வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர்.  இவர்களில் 42,972,665 பேரின் வாக்குகள் செல்லுபடியானதாக ஏற்றுகொள்ளப்பட்டது. அதில் 93,9505 பேரின் வாக்குகள் செல்லுபடியற்றதாக நிராகரிக்கப்பட்டுள்ளது  துருக்கியின் மக்கள் தொகை  78,785,548 என்பதும் நேற்று இடம்பெற்ற தேர்தல் மூலம் மொத்தம் 550 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் 

முஸ்லிம் அரசியல் நிலையை காரணம் காட்டி எவரும் முஸ்லிம்களின் உரிமைகளை புறக்கணிக்க முடியாது

முஸ்லிம் அரசியல் நிலையை காரணம் காட்டி எவரும் முஸ்லிம்களின் உரிமைகளை புறக்கணிக்க முடியாது


முஸ்லிம்கள் தரப்பில் இருக்கும் அரசியல் பலவீனங்களை காரணமாக காட்டி அரசாங்கமோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறுயாருமோ முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை உரிமைகளை புறக்கணிக்க முடியாது இலங்கையில் பொதுவாக எல்லா கட்சிகளும் -சிறுபான்மை – பலவீனமாகவே உள்ளது அதனை காரணமாக காட்டி முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படவேண்டிய உரிமை எந்தவகையிலும் மறுக்கப்படமுடியாது என்று பிரிட்டனை தளமாக கொண்டியங்கும் தீபம் தொலைகாட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் கலந்துகொண்டு கருத்துரைத்துள்ள அஷ் ஷெய்க் நஜா முஹம்மத் ( இஸ்லாஹி) தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள இந்த நேரத்தில் நீண்ட காலத்தில் இலங்கை நிரந்தரமான ஒரு சமாதானத்தை அடைய வேண்டுமானால் நிச்சயமாக அரசாங்கம் தீர்வொன்றை கொடுக்கவேண்டும் விரிவாக
வரலாற்றை பார்க்கின்றபோது எந்த பேச்சுவார்த்தையிலும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை பொறுத்தவரையில் குறிப்பாக கிழக்கு மாகாண த்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பாக சரியான நிலைப்பாட்டை தமிழ் தலைமைகள் கொண்டிருக்கவில்லை.
 பண்டா செல்வா ஒப்பந்தம் முதல் இறுதியாக இடம்பெற்ற ரணில் புலிகள் ஒப்பந்தம் வரையும் முஸ்லிம்களின் உரிமைகள் -இருப்பு- தொடர்பாக சரியான நிலைப்பாட்டை தமிழ் தலைமைகள் கொண்டிருக்கவில்லை இதன்காரணமாகவே அரசு தமிழ் தரப்பு பேச்சின் போது முஸ்லிம்கள் உள்வாங்கப் படவேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் தரப்பில் முன்வைக்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
அங்கு எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போது இவ்வாறு கருத்துரைத்துள்ளார் இந்த நிகழ்ச்சியை இங்கு பார்க்க முடியும்.

Wednesday, June 8, 2011

Allah is Great




 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
அன்புச் சகோதர சகோதரிகளே!
Assalaamu alaikum va rahmathullahi va barakathu..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!

“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

 மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை
நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்
ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்

ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது

”ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.” (அல் குர்ஆன்: 86:5-7)


இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்

பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
 பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது

ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்

இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்
பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும்  விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!

ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG  அதாவது கருமுட்டையாகும்

கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.

கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது
கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன

கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது

கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன
பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது

கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது

கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!

கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.

கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!

கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.

கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன

கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.

கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.

கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.
மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்
“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாத்திற்குள் வாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!
 அல்ஹம்துலில்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்