லண்டனில் இஸ்லாமிய சமூகப் புரட்சி: உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்
லண்டன் இஸ்லாமிய தவ்வா செண்டர் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யும் இஸ்லாமிய மாநாடு தற்போது லண்டன் தவ்வா செண்டரில் நடை பெற்றுகொண்டிருகின்றது அதில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இறுதி தூதரின் இனிய அழைப்பு – இஸ்லாமிய சமூக புரட்சி என்ற தலைப்பில் உரையாற்றி கொண்டிருகின்றார் என்று அங்கிருந்து அலி ரிஸான் அவர்கள் lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார்.
அங்கு உரையாற்றும் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதரின் அழைப்பு ஒரு முழுமையான சமூக புரட்சியாக இருந்தது என்றும் அல்லாஹ்வின் தூதர் ‘கூனு லாயிலாக இல்லலாஹ் துப்ளிஹூன் ‘ அல்லாஹ்வை தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை என்று ஏற்றுகொள்ளுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று மக்களை அழைத்தார்கள் அந்த வெற்றியின் ஒன்று மறுமையில் சுவர்க்கம் என்ற வெற்றி இரண்டாவது வெற்றி இந்த உலகில் நீங்கள் ஏற்றுகொள்ளும் இந்த கொள்கை நிலைநாட்டப்பட்டு நீங்கள் அரபிகளுக்கும் அஜமிகளுக்கும் ஆட்சியாளராக இருப்பீர்கள் என்பதாக இருந்தது என்று தெரிவித்தார் விரிவாக
இதுதான் அல்லாஹ்வின் தூதரின் அழைப்பாக இருந்தது இந்த சமூக புரட்சிக்கான அழைப்பை அன்றைய மக்கள் தெளிவாக விளங்கி கொண்டார்கள் வெறுமனே அவரின் அழைப்பு சில தனிநபர்களில் அவர்களின் வாழ்கையில் சில மாற்றங்கள் தோற்று விற்பதாக இருக்கவில்லை மாறாக ஒரு பாரிய சமூக மாற்றத்தை வேண்டியது என்று உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றும் போது அல்லாஹ்வின் தூதரின் அழைப்பில் இரண்டு பக்கங்கள் வெளிப்பட்டன ஒன்று இஸ்லாத்தை ஏற்றுகொண்டால் சுவர்க்கம் என்பதும் மற்றது பாரிய சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டமாகவும் இருந்தது ஒரு முறை மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சித்திரவதைகளை அனுபவித்து வந்த ஹப்பாப் இப்னு அரத் என்ற சஹாபி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எமக்காக அல்லாஹ்விடம் உதவி புரியுமாறு வேண்ட கூடாத ? என்று வினவியபோது அதற்கு பதில் தெரிவித்த அல்லாஹ்வின் தூதர் நீங்கள் அவசர படுகின்றீர்கள் உங்களுக்கு முன்பிருந்தவர்கள் நிலத்தில் கால்கள் வரை புதைக்கப்பட்டு தலையில் இருந்து கால்கள் வரை இரண்டாக பிளக்கபட்டார்கள் ஆனால் அவர்கள் இஸ்லாத்தை கைவிடவில்லை உயிரை விட்டார்கள்.
மேலும் அந்த சித்ரவதைக்கு முகம் கொடுக்கும் ஹப்பாப் இப்னு அரத் என்ற தோழரிடம் ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்றார்கள் இந்த சம்பவம் அன்று அல்லாஹ்வின் தூதர் எந்த பலமும் இன்றி இருந்தபோதும் தனது தோழர்கள் சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க எந்த சக்தியும் இல்லாதபோதும் கூட சன்ஆவில் – தற்போதைய யெமன் நாட்டின் தலைநகர் – இருந்து பல ஆயிரக்கணக்கான மயில்கள் துரத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் சித்திரவதை பட்டு வரும் தனது தோழருக்கு ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்று தெரிவித்தமை அவர் சமூக புரட்சி ஒன்றை வேண்டி நின்றார் என்பதைத்தான் காட்டுகின்றது என்று தெரிவித்தார்.
இதை அல்லாஹ்வின் தூதர் சொல்லும் போது அன்று மக்காவில் முஸ்லிம்கள் அடிக்குமேல் அடி வாங்கிகொண்டிருந்தார்கள் தம்மை பாதுகாக்க கூட அவர்களிடம் எந்த பலமும் இருக்கவில்லை கவ்பாவுக்குள் 360 விக்ரகங்கள் இருந்தன அவற்றை எதுவும் செய்யமுடியாத மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர்.
அடிபட்டு சித்திரவதைகளை பெற்றுவரும் தோழரிடம் ஆயிரக்கணக்கான மையில்களுக்கு அப்பால் உள்ள சன்ஆவை பற்றி பேசுகின்றார் அன்று அரேபிய தேசம் கொள்ளை கொலை வழிப்பறி என்று அனைத்து குற்றங்களும் நிறைந்து காணப்பட்டது தனது தோழர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருந்த அல்லாஹ்வின் தூதர் சித்திரவதை பட்டு வந்த தனது தோழரை தனக்கு முன் உக்காரவைத்து ஒரு பெண் தனியாக சன்ஆவில் இருந்து ஹதரல் மைவ்துக்கு ஓநாய் பயத்தை தவிர எந்த பயமும் இன்றி பிரயாணம் செய்வாள் என்று கூறியது அவர் பாரிய சமூக புரட்சியை சமூக மாற்றத்தி வேண்டிநின்றார் என்பதைத்தான் காட்டுகின்றது என்று தெரிவித்தார்
அதேபோன்று அல்லாஹ்வின் தூதர் கோத்திர தலைவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது இரண்டு விடயங்களை முன்வைத்தார்கள் ஒன்று நீங்கள் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவேண்டும் என்பதும் இரண்டாவது நீங்கள் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தை இந்த பூமியில் நிலைநாட்ட நீங்கள் எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதாகும் இந்த இவரின் அழைப்பை கோத்திர தலைவர்கள் அன்று தெளிவாக புரிந்து கொண்டனர்.
ஒரு முறை ஆமிர் இப்னு சஹ்ஸா என்ற கோத்திரத்தின் தலைவரை அழைத்து அல்லாஹ்வின் தூதர் நீங்களும் உங்கள் சமூகத்தவர்களும் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவேண்டும் என்றும் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தை இந்த பூமியில் நிலைநாட்ட நீங்கள் எனக்கு முழுமையாக உதவி புரியவேண்டும் என்று கோரினார்கள் அதற்கு தனது ஏனைய கோத்திர தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பதிலளித்த அந்த கோத்திர தலைவர் ஆம் நாங்கள் ஏற்றுகொள்கின்றோம் அனால் ஒரு நிபந்தனை உங்களின் மரணத்துக்கு பின்னர் தலைமைத்துவம் எங்களின் கோத்திரத்துக்கு தரப்படவேண்டும் என்று தெரிவித்தார் இந்த சம்பவங்கள் அல்லாஹ்வின் தூதர் பாரிய சமூக மாற்றத்தை நோக்கிய அழைப்பு விடுவதை அன்றைய மக்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதை காட்டுகின்றது என்று தெரிவித்தார் என்று அலி ரிஸான் தெரிவிக்கின்றார்.
இந்த மாநாட்டில் மேலும் மௌலவி உமர் சரீப் மற்றும் மௌலவி அப்துல் காதர் மதனி ஆகியோரும் உரையாற்றவுள்ளனர் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹாம் ப்லாஷேட் பாடசாலையில் இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது மாநாட்டில் ஏராளமான தமிழ் பேசும் இலங்கை இந்திய நாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.