அரபு கலாசாலைகளுக்கான பொது பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப் படுத்தும் முயற்சி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரும் ஜாமியா நழீமியாவின் பிரதிப்பணிப்பாளரும், இத்திஹாதுள் மதாரிஸில் அரபியா ஒன்றியத்தின் உறுப்பினருமான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹமத் அவர்களை lankamuslim.org தொடர்பு கொண்டபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக அரபு கலாசாலைகளுக்கான பொது பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளபட்டு வந்தாலும் பல காரணங்களால் தடைப்பட்டிருந்த இந்த முயற்சி முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த சில வருடங்களாக இலங்கையின் விசேட ஆலிம்கள் குழு, நிபுணர்கள் குழு மூலம்மேற்கொண்டு வந்த முயற்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது .
முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலங்கையில் உள்ள அரபு கலாசாலைகளுக்கான பொது பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் தேற்றுவிக்கப்பட்ட ”இத்திஹாதுள் மதாரிஸில் அரபியா” என்ற அமைப்பு அரபு கலாசாலைகளுக்கான பொது பாடத்திட்டத்தை பலர் அமர்வுகளின் ஊடாக தயாரித்து அனைத்து தரப்பினரின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. தற்போது பூர்த்தியடைந்துள்ள பொது பாடத்திட்டத்தை. முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபு, மற்றும் ஆங்கிலம் , தமிழ் , சிங்களம் ஆகிய மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்துள்ளது.
உருவாகப்பட்டுள்ள பொது பாடத்திட்டதிற்கான பரிட்சைகள் இலங்கை அரசாங்கத்தின் பரிட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது . இதற்கான கலந்துரையாடல் ஒன்று இலங்கை பரிட்சைகள் திணைக்களத்துடன் மேற்கொள்ளப்பட்டு பரிட்சைகள் திணைக்களத்தின் சில ஒழுங்கு முறைக்கு அமைவாக திருத்த வேலைகள் இடம்பெற்றுவருகின்றது இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு மாதகாலத்தில் இதற்கான எஞ்சியுள்ள வேலைகளும் பூர்த்தியாகி இலங்கை பரிட்சைகள் திணைக்களத்தினால் பரிச்சைகள் மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகள் வெற்றிபெறும் என்று எதிர்பார்கலாம் என்றும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா மற்றும் இத்திஹாதுள் மதாரிஸில் அரபியாவும் மிக விரைவில் அரபு கலாசாலைகளின் அதிபர்கள் , நிர்வாகிகளை அழைத்து இந்த பொது பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திவைக்கவுள்ளது அதேவேளை முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலங்கை பரிட்சைகள் திணைக்களத்தினால் மூலம் இந்த பாடதிட்டதிற்கான பரிச்சைகளை நடாத்தத்தேவையான ஏற்பாடுகளை செய்துவருகின்றது எனவும் தெரிவித்தார்.
நியமிக்கப்பட்ட விசேட ஆலிம்கள் கொண்ட நிபுணர்கள் குழு பல அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளை கொண்டுள்ளது இந்த இத்திஹாதுள் மதாரிஸில் அரபியா அமைப்பில் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹமத் அவர்களும் அங்கம் வகிக்கின்றார். இந்த பொது பாடத்திட்டம் மூன்று கட்டங்களை கொண்டது ஒன்று முதல் பிரிவு கா.போ.தா.(சா/த) தரத்திளான பாடத்திட்டத்தையும் , இரண்டாம் பிரிவு கா.போ.தா.(உ /த) தரத்திளான பாடத்திட்டத்தையும் மூன்றாம் பிரிவு பல்கலை கழக பட்டப் படிப்பு தரத்திளான பாடத்திட்டத்தையும் கொண்டதாக தயாராகியுள்ளது.
இருந்த போதிலும் முதல் இரண்டும் இலங்கை பரிட்சைகள் திணைக்களத்தினால் அதற்கான பரிச்சைகளை மேற்கொள்ள முடியுமாயினும் மூன்றாம் பிரிவு பல்கலை கழக பட்டப் படிப்பு தரத்திளான பாடத்திட்டம் இலங்கை பல்கலை கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப் பட்ட பின்னர் பல்கலை கழகம் ஒன்றினால் நடாதத்ப்படவேண்டி இருப்பதால் அது தொடர்பாக இலங்கை பரிட்சைகள் திணைக்களத்தினால் தீர்மானம் எடுக்க முடியாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி அரபு கலாசாலைகளுக்கான பொது பாடத்திட்டம் இலங்கையின் அரபு கலாசாலைகளில் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதும். உருவக்கபட்டுள்ள பாடத்திட்டத்தை மாணவர்கள் மேலதிகமாக கற்று பரிச்சைக்கு தயாராக வேண்டும் என்றும் இது கட்டாய பரிச்சையாக மாணவர்களுக்கு அமையாது என்றும் இந்த பாடத்திட்டத்தை பயின்று பரிச்சை எழுதுபவர்கள் அரசினால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதல்களை பெறுவதுடன் எதிர்காலத்தில் அரசாங்க தொழில்களை பெறுவதற்கும் துணை புரியும் என்றும் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலை கழகங்களுக்கு செல்வதற்கு இதனை ஒரு தகமையாக கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார். அரபு கலாசாலைகளுக்கான பொது பாடத்திட்டம் மொழி , சட்டம் , வரலாறு , அகீதா, தப்ஸீர் போன்ற படங்களை உள்ளடக்கியது என்பது குறிபிடத்தக்கது.