Wednesday, September 14, 2011

வைகோவுடன் அப்துல்லாஹ் என்ற பெரியார் தாசன்

வைகோவுடன் அப்துல்லாஹ் என்ற பெரியார் தாசன்

திரைப் பட நடிகரும், முன்னாள் பேராசிரியருமான முனைவர் அப்துல்லாஹ் என்ற பெரியார் தாசன் தமது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் வைகோ முன்னிலையில் அவருக்கு சால்வை அணிவித்து மதிமுகவில் இணைந்தார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது. இந்நிகழ்ச்சியில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்
அண்மையில் இலங்கை வந்த பேராசிரியர் அப்துல்லாஹ் காத்தான்குடியில் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் மற்றும் வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் தம்மை அதிகமாக பாதித்ததன் காரணமாக ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை தான் கைவிட்டதாகவும்
ஆரம்பகாலத்தில் நான் இலங்கையின் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவந்தேன். எனினும் அக்குழுக்கள் முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டபோது, நான் எனது நிலைப்பாட்டினையும் மாற்றிட நேர்ந்தது. வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், காத்தான்குடி முஸ்லிம்களின் படுகொலை சம்பவங்கள் என்னை அதிகமாக பாதித்தது. இவை மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரம். இவற்றை எவராலும் நியாயப்படுத்த முடியாது. என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.
தற்போது அவர் தமிழ் நாட்டில் புலிகளின் பிரதான ஆதரவாளரான அரசியல்வாதி வைகோ ஆணியில் இணைத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. ஆனாலும் பேராசிரியர் முனைவர் அப்துல்லாஹ் இது தொடர்பாக என்ன தொரிவித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment