கேகாலையில் இளமை பெண்ணை நிர்வாணமாக்கி சேஷ்டை புரிந்த சட்ட வைத்திய அதிகாரி: முறைப்பாடு
சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த கேகாலை போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி பொதுவாக இளம்பெண்களுடன் குறிப்பாக முஸ்லிம் பெண்களுடன் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடுவதாக கேகாலை முஸ்லிம் இயக்கம், பள்ளிவாசல் நிர்வாகம்
என்பன நீதியமைச்சர் ரவூப் ஹகீமுக்கு முறையிட்டுள்ளது என்றும் நீதியமைச்சருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளதாக விடிவெள்ளி பத்திரிகை தெரிவித்துள்ளது.
அமைச்சருக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது, ‘ அண்மையில் வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய முஸ்லிம் பெண் னொருவர் தலையில் காயங்களுக்காக சிகிச்சை பெற கேகாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார் வைத்திய சாலை வார்ட்டிலிருந்த வைத்திய சாலை பெண் ஊழியருடன் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்ட போது, பெண் ஊழியரை அறையினுள் அனுமதிக்காகது முஸ்லிம் பெண்ணை கட்டிலில் கிடத்தி நிர்வாணமாக்கி உடல் முழுவதும் தேவையற்ற விதத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது . குறிபிட்ட பெண் கதறியவாறே வெளியேறியுள்ளார்.
இதில் தலையிட்ட ஆஸ்பத்திரி போலீஸ் அதிகாரி சட்ட மருத்துவ அதிகாரியினால் நையப் புடைக்கப்பட்டுள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை வைத்திய சாலை சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பெரிய வைத்திய சாலையாகும். பெரும்பாலான நோயாளிகள வார்ட்டுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றார்கள். சட்ட ரீதியான மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டியேற்படும் போது அவர்கள் குறிப்பிட்ட சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இச் சந்தர்பங்களிலே குறிபிட்ட வைத்திய அதிகாரி இளம் பெண்களுடன் தவறாக நடந்து கொள்வதாகவும் முறைப்பாட்டில் குறிபிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப் பாட்டின் பிரதிகள் கேகாலை போதனா வைத்திய சாலை பணிப்பாளருக்கும் அமைச்சின் உயரதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment