Saturday, October 29, 2011


கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் 


ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
 மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை 
  1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
  2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
  3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
  4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
  5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
  6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்

ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்
ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது
ஆகவே மனிதன், (தான்)எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்கவேண்டாமாகுதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன்படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசிநெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.(அல் குர்ஆன்:86:5-7) 


இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
 பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்

இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்
பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும்  விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!

ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG  அதாவது கருமுட்டையாகும்

கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
  • ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

  • கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.

  • கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது
  • கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன

  • கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது

  • கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

  • கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன
பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
  • கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
  • கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது

  • கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது

  • கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!

  • கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.

  • கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

  • கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
  • கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!

  • கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.


  • கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன

  • கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.

  • கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.

  • கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.
மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
 நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாத்திற்குள் வாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
குறிப்பு – பல்வேறு இணைதளங்கள் இந்த கட்டுரைக்கு உதவின நன்றிகள் பல!
அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!
 
 அல்ஹம்துலில்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்
 


சிறுபான்மை மாணவர்களுக்கு சிங்கள பாடசாலைகளில் 20 வீத இட ஒதுக்கீட்டு !!


பிரபல பாடசாலைகள் தவிந்த சிங்கள பாடசாலைகளில் 20 வீதமான அனுமதியை தமிழ், முஸ்லிம் பிள்ளைகளுக்கு பெற்று கொடுப்பது குறித்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என ஜாதிக ஹெல உருமையவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்த தேரர் கூறினார் என்று நவமணி பத்திரிகை தெரிவிக்கின்றது.
அந்த பத்திரிகை தகவலில்  ஜாதிக ஹெல உருமைய தூதுக்குழுவுக்கும் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சிலுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையேயும் நல்லெண்ணத்தைக் கட்டி வளர்ப்பதற்கும் புரிந்துணர்வை ஏற்படுத்துவ தற்குமாக பிரபல பாடசாலைகள் தவிந்த சிங்கள பாடசாலைகளில் 20 வீதமான அனுமதியை தமிழ், முஸ்லிம் பிள்ளைகளுக்கு பெற்று கொடுப்பது குறித்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என ஜாதிக ஹெல உருமையவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்த தேரர் கூறினார்  என்று தெரிவிக்கின்றது.
மேலும் சமூகங்களுக்கிடையே நல்லெண்ணத்தைக் கட்டி எழுப்பும் நோக்கில் ஹெல உருமயவின் அழைப்பின் பேரில் கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை பற்றி முஸ்லிம் கவுன்சில் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய அல்ஹாஜ் என்.எம்.அமீன் எடுத்துக்கூறிய போதே ஜாதிக ஹெல உருமையவின் பாராளுமன்ற உறுப்பினர் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்துக்கு கல்வி வாய்ப்புக்கள் குறைவாகவுள்ளன முஸ்லிம்களது பல்கலைக்கழக அனுமதி 5 வீதமாகவே உள்ளது அதுவும் கூடுதலாக கலைப் பீடங்களுக்கே தெரிவாகின்றனர். கொழும்பு மாநகரிலுள்ள முஸ்லிம்களது கல்வி நிலை மிக மோசமாகவுள்ளது. கொழும்பிலிருந்து ஒரு சிலரே பல்கலைக் கழகம் தெரிவாகின்றனர். சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம்களுக்கோ , தமிழர்களுக்கோ அனுமதி வழங்கப்படுவது மிக குறைவாகும். இந்த நிலையில் முஸ்லிம்களது கல்வி நிலை மோசமாகவுள்ளது. அரசாங்கத் தொழில் துறைகளிலும் 3 வீதமான முஸ்லிம்களே இருக்கிறார்கள். பார்க்கின்ற பார்வைக்கு முஸ்லிம்கள் பணக்காரச் சமூகம் போல் தென்பட்டாலும் வறியவர்களே கூடுதலாக உள்ளனர். கொழும்பு மாநகரிலுள்ள சேரிகளில் கூடுதலாக முஸ்லிம்களே வாழ்கின்றார்கள். கொழுப்பு பாடசாலைகளில் போதிய வசதிகளில்லாததால் முஸ்லிம் பிள்ளைகள் இடையில் கல்வியை கைவிட்டு பாதாள உலகுக்குச் செல்ல நிர்பந்திக்ககப்படுகின்றனர். இவர்களை சமூகவிரோதச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகி என முஸ்லிம் கவுன்சில் தலைவர் தனது அறிமுக உரையில் எடுத்து விளக்கினார் .
முஸ்லிம்கள் தம் பிள்ளைகளை சிங்கள மொழியில் கற்பிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் .ஆனால் வாய்ப்புகள் வழங்கப் படுவதில்லை எனத் தூதுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கு சிங்கள மொழி மூலம் படித்த முஸ்லிம்களும் ,தமிழர்களும் சிங்கள கலாச்சாரத்தை மதிப்பதை காணுகிறோம் என அத்துரலிய ரத்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையே காணப்படும் சந்தேகங்களை அகற்றி புரிந்துணர்வையும் நல்லுறவையயும் கட்டியெழுப்புவதற்கான புதிய அணுகு முறையை கையாளுவதற்கு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. என்றும் இலங்கை முஸ்லிம் கவுன்சில் மேற்கொண்ட இந்தத் திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியேரத்ன தேரோ தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி முன் வந்துள்ளது என்று தினக்குரல் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் கொழும்பில் ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்,முஸ்லிம்,சிங்கள மூன்று தரப்பினரும் மாதாந்தம் கூடிய பிரச்சினைகளை சுமுகமாக ஆராய்ந்து தீர்வு காண்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது சந்திப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் நடத்துவதெனவும் இதற்கு மூவினத்தையும் சார்ந்த புத்திஜீவிகள் மற்றும் பிரமுகர்களை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டச் சந்திப்பின் போது சிறுபான்மைச் சமூகத்தவரின் கல்வி நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது என்று தெரிவித்தது.
lankamuslim.org

சவூதி உம்முல் குரா பல்கலைக்கழக ஆசிய பிராந்திய கிளை இலங்கையில்


பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் நேரில் இணக்கம் சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் ஆசியப் பிராந்தியத்திற்கான கிளையை இலங்கையில் அமைப்பதற்கு கொள்கை யளவில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக மகளிர் விவகார, சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று தெரிவித்தார். சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மத்திய கிழக்கிலுள்ள மிகப் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மக்கா உம்முல் குராவின் கிளையொன்றை இலங்கையில் அமைக்குமாறு சவூதி அரேபியாவிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதற்கேற்ப இவ்விஜயத்தின் போது உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் கலாநிதி பக்றி அல் பக்கீரையும், அப்பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இப்பேச்சுவார்த்தையின் போது இந்தப் பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை ஆசிய கண்ட நாடுகளின் மாணவர்களது நலன் கருதி இலங்கையில் நிறுவுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்தேன். இக்கிளையை இலங்கையில் நிறுவுவதற்கு ஏற்ற சாதகமான சூழல் நிலவுவதையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.
இப்பல்கலைக்கழகத்தின் ஆசியக் கிளையை இலங்கையில் நிறுவுவதற்குத் தேவையான உயர் கல்வி அமைச்சின் வேண்டுகோள் கடிதத்தையும் அவர்களுக்கு வழங்கினேன்.
அதேநேரம் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் வலுவான அரசியல் ஸ்தீரத்தன்மை நிலவுகின்றது. நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அச்சம், பீதியின்றி நடமாடவும், வாழவும் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். ஆசியக்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குப் பயணம் செய்வதும் மிகவும் இலகுவான காரியம்.
இக்கிளையை அமைப்பதற்கென நூறு ஏக்கர் காணியைப் பெற்றுத் தருவதாகவும் அவர்களிடம் உறுதியளித்தேன். தாம் முன்வைத்த காரணங்களில் கவனம் செலுத்திய பல்கலைக்கழகத்தின் தலைவரும், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுமே, இப்பல்கலைக்கழகத்தின் ஆசியப் பிராந்தியக் கிளையை இலங்கையில் அமைப்பதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தனர்.
இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் உம்முல் குரா பல்கலைக்கழக தலைவரும் பணிப்பாளரும் சபையினரும் சவூதி அரேபியாவின் உயர் கல்வி அமைச்சுடனும், வெளிவிவகார அமைச்சுடனும் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
இப்பல்கலைக்கழகம் பொறியியல், மருத்துவம் பெற்றோலிய விஞ்ஞானம், கணனி தொழில் நுட்பம் உட்பட 46 பீடங்களைக் கொண்டிருக்கின்றது. இங்கு 55000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் 300 பேர் ஆசிய கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 16 பேர் இலங்கை மாணவர்கள் என்றார்.-தினகரன் மர்லின் மரிக்கார்.

ஒரு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு நிகழும் அவலங்களை அந்த பிரதேசத்துடன் மட்டும் வைத்து பார்க்கமுடியாது


ஒரு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு நிகழும் அவலங்களை அந்த பிரதேசத்துடன் மட்டும் வைத்து பார்க்கமுடியாது


முஸ்லிம் சமூகத்திடம் .. ஆற்றல் இல்லை. முஸ்லிம்களிடம் தலைமைத்துவம் இல்லை , முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தக்கூடிய பொருத்தமான தலைமைத்துவத்தை முஸ்லிம் சமூகத்தால் பெறமுடியவில்லை. தமிழ் சமூகத்தில் நடக்கும் சிறிய , பெரிய பிரச்சினைகள் சர்வதேச கவனத்தை பெறுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் சர்வதேச கவனத்தை பெறுவதில்லை.
இதற்கு தலைமைத்துவம் இன்மை ஒரு பிரதான காரணம். இரண்டாவது காரணம் முஸ்லிம் சமூகத்திடம் ஒழுங்கமைப்பு இன்மை. மூன்றாவது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சர்வதேச வலையமைப்பு இன்மை.
முஸ்லிம் சமூகத்தில் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் பிரதேசவாதங்களும், தேசியவாதங்களும் தான் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது. இஸ்லாமிய உம்மத் என்றவகையில் முஸ்லிம் சமூகத்தை ஒழுங்குபடுத்த ஒன்றுபடுத்த செயல்பாடுகளும் நடைபெறவில்லை.
கருப்பு ஒக்டோபர் மாதமான இந்த மாதத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றபட்டார்கள். முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த இத்தகைய அவலங்கள் ஒரு போதும் எவருக்கும் நிகழக்கூடாது. இந்த கருப்பு ஒக்டோபர் தொடர்பாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவரும், உலகின் பல நாடுகளுக்கும் சென்று இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபடுபவரும், இஸ்லாஹியா அரபு கலாசாலையின் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை தொடர்பு கொண்டு lankamuslim.org உரையாடியது அதன் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில் சுருக்கமாக் இங்கு தரப்படுகின்றது.
கருப்பு ஒக்டோபர் தொடர்பாக வினவியபோது : இலங்கையில் மிகவும் அப்பாவி சமூகமான எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்காத முஸ்லிம் சமூகத்தின் மீது இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் , முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றார்கள். முஸ்லிம் சமூகம் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைத்ததாக வரலாறு இல்லை. அசாதாரண நிலைகளில் சிலர் அநீதி இழைத்திருக்கலாம், சில கலவரங்களின் போது அவ்வாறு நடத்திருக்கலாம். ஆனால் முஸ்லிம் சமூகம் திட்டமிட்டு எந்த சமூகத்திற்கும் சமூகமாக இணைந்து அநீதி இழைக்கவில்லை. அப்படியான நிராயுதபாணி முஸ்லிம் சமூகத்தின் மீதுதான் இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
அன்று முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் அரசாங்கம் அந்த விடயத்தில் மௌனம் சாதித்தது என்று கூறலாம். ஒரு நிரபராதியான சமூகம் ஒரு போராட்ட குழுவால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது. அதை வெற்றியாக அவர்கள் கொண்டாடினார்கள். அதை பார்த்துகொண்டிருந்த அரசாங்கம் அதை தமக்கு சார்பாக, எதிரியை பலவீனப்படுத்த ஒரு துரும்பாக பாவித்து ,முஸ்லிம்களுக்கு பிரத்தியோகமாக எதுவும் செய்யப்படவில்லை.
வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் எந்தளவு தூரம் வரலாற்றில் உள்வாங்கப்பட்டுள்ளது என்று கருதுகிறீர்கள்: ஓரளவுக்கு ஆவணப்டுத்தப்பட்டுள்ளது என்று சொல்லமுடியும். ஆனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் சக்திகள் மீது தாக்கம் செலுத்தும் அளவுக்கு உள்வாங்கப்படவில்லை.
கருப்பு ஜூலை சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. ஆனால் கருப்பு ஒக்டோபர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவையான அளவு உள்வாங்கப்படவிலை இது தொடர்பாக கேட்டபோது: தலைமைத்துவம் இல்லாமல் எவரும் அதை இலகுவாக உள்வாங்கிக் கொள்ளமாட்டார்கள். முஸ்லிம் சமூகத்திடம் அதற்கான ஆற்றல் இல்லை. முஸ்லிம்களிடம் தலைமைத்துவம் இல்லை , முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தக்கூடிய பொருத்தமான தலைமைத்துவத்தை முஸ்லிம் சமூகத்தால் பெறமுடியவில்லை. தமிழ் சமூகத்தில் நடக்கும் சிறிய , பெரிய பிரச்சினைகள் சர்வதேச கவனத்தை பெறுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் சர்வதேச கவனத்தை பெறுவதில்லை இதற்கு தலைமைத்துவம் இன்மை ஒரு பிரதான காரணம். இரண்டாவது காரணம் முஸ்லிம் சமூகத்திடம் ஒழுங்கமைப்பு இன்மை. மூன்றாவது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சர்வதேச வலையமைப்பு இன்மை.
மற்ற தமிழ் , கிறிஸ்தவ சமூகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றிடம் இவை காணப்படுகின்றது. தமிழ் சமூகம் அதை இனப்பிரச்சினையின் பின்னர் உருவாக்கி கொண்டுள்ளது. கிறிஸ்தவ சமூகம் உலகின் கைத்தொழில் புரட்சிக்கு பின்னரான காலத்திலிருந்து தமது ஆதிக்கத்தை உலகில் நிலைநிறுத்த அப்படியான சர்வதேச வலையமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளது . முஸ்லிம் சமூகத்தில் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் பிரதேசவாதங்களும், தேசிய வாதங்களும் தான் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது. இஸ்லாமிய உம்மத் என்றவகையில் முஸ்லிம் சமூகத்தை ஒழுங்குபடுத்த ஒன்றுபடுத்த  செயல்பாடுகளும் நடைபெறவில்லை.
நான் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினையை மட்டும் கூறவில்லை சர்வதேச ரீதியாக பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் பிரச்சினைகளும் ஊடங்களில் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆப்கானிஸ்தான் பிரச்சினையை பயங்கரவாத்திற்கு எதிராக அமெரிக்கா யுத்தம் செய்வதாகவே ஊடகங்கள் சத்தம்போட்டு கொண்டிருகின்றது. இவைகள் முஸ்லிம் சமூகத்தின் பலவீனத்தை காட்டுகின்றது, முஸ்லிம் சமூகத்தின் கையாலாகாத தன்மையின் விளைவுகள்தான் இவை. மற்ற சமூகங்கள் எமது பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை என்பதால் அவை சாதாரண பிரச்சினைகள் என்பதல்ல.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினை பதிவுகளை பெற்றிருந்தாலும் அவை சரியான தாகத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு நாட்டில் , ஒரு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு நிகழும் அவலங்களை அந்த பிரதேசத்துடன் மட்டும் வைத்து பார்க்கமுடியாதுள்ளது. இன்று கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அது அவ்வாறு பார்க்கப்படுவதில்லை. கிழக்கு தீமோர் பிரச்சினை ஓர் சர்வதேச பிரச்சினையாகத்தான் பேசப்படுகின்றது. ஆனால் ஆப்கானிஸ்தான் பிரச்சினை அப்படிப் பேசப்படவில்லை அது பயங்கரவாத பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது. இவை இரண்டுக்குமுள்ள வித்தியாசத்திக்கான காரணம் அவர்களுக்கு சர்வதேச தலைமைத்துவம் இருக்கிறது வல்லரசு என்ற அதிகாரம் இருக்கின்றது தீர்மானம் மேற்கொள்ளும் சக்தி இருக்கிறது. அவர்கள் நினைத்தால் உண்மையை பொய்யாக்க முடியும் பொய்யை உண்மையாக்க முடியும்.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் அது ஒரு நாட்டுடன் தொடர்பான அல்லது பிரதேசத்துடன் தொடர்பானதாக இருக்கலாம், ஆனால் அவைகளை ஒரு சிறிய எல்லைக்குள் வைத்து மட்டும் பார்க்க முடியாது. இலங்கையில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை விடுதலை புலிகள் வெளியேற்றியது ”மிகவும் பயங்கரமான ஒரு பகல்கொள்ளை” – இலங்கை – வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்காது. ஆனால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினை அந்த பிரதேசத்துதன் மட்டுப்படுத்தி நான் பார்கவில்லை. முஸ்லிம் சமூகத்தின் பலவீனம் காரணமாக இந்த பிரச்சினை அப்படியே மண்ணுக்குள் புதைக்கப்படும் பிரச்சினையாக உள்ளது.
-இஸ்லாமிய சாம்ராஜியத்தில்- அப்பாசிய கலிபாக்களின் ஒருவரான முஹ்தசிம் இவர் மிக பலவீனமாக கிலாபத் காலப்பிரிவில் ஒரு கலிபாவாக இருந்தபோதும் அம்மூரியா என்ற பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு அநியாயம் இழைக்கப்பட்ட நேரம் அந்த பெண் கலிபாவே என்னை காப்பற்றுங்கள் என்று உதவி கோரியபோது அந்த செய்தி அவருக்கு எட்டுகிறது. அவர் படையை திரட்டிக்கொண்டு சென்று அந்த பிரதேசத்தை கைப்பற்றி அந்த பெண்ணையும் மீட்டு அந்த பெண்ணுக்கு அநியாயம் இழைத்தவர்களை அவள் முன் நிறுத்தி அந்த பெண்ணிடம் இவர்களுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டுமென்று சொல் என்று கேட்ட வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் சமூகத்தின் எந்த பிரச்சினையும் அது முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாட்டிலுள்ள ஒரு பிரச்சினையாக இருக்கலாம் அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டிலுள்ள ஒரு பிரச்சினையாக இருக்கலாம் அதை எங்குபோய் முறையிடுவது ? – என்ற பிரச்சினை இருக்கின்றது -.
இன்று முஸ்லிம்களுக்கு சர்வதேச தலைமைத்துவம் இல்லை. பல முஸ்லிம் நாடுகள் இருக்கின்றது இவற்றை பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு எதிராக பெரிய வேலைத்திட்டம் ஒன்றை செய்யமுடியும் ஆனால் அந்த நிலையில் முஸ்லிம் உம்மத்தோ , முஸ்லிம் நாடுகளோ இல்லை இது அல்லாஹ்வின் தூதர் கூறிய செய்தியைத்தான் நினைவுபடுத்துகின்றது. ஒரு காலம் வரும் அப்போது பசித்த பிராணி தமது உணவு தட்டை நோக்கி பாய்ந்து வருவது போன்று அடுத்த சமூகங்கள் உங்களின் மீது பாயும் என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். இதன்போது தோழர்கள் நாம் அப்போது எண்ணிக்கையில் குறைவாக இருப்போமா ? என்று வினவினார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் இல்லை ஆனால் நீங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நுரை மாதிரி இருப்பீர்கள் என்று கூறினார்கள்.
இந்த பிரச்சினைகள் இதைத்தான் நினைவு படுத்துகிறது எனவே வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அணியாயங்களாக இருக்கலாம் ஆப்கானித்தான் போன்ற நாடுகளில் நடக்கும் அணியாயங்களாக இருக்கலாம் முஸ்லிம்கள் தமது இலச்சியத்தை நோக்கி திரும்பவேண்டும், உலகில் தமது கடமைகளை, பொறுப்புகளை உணரவேண்டும் அதன் பால் ஒழுங்கமைக்கப் படவேண்டும் என்பதைத்தான் அவை வெளிப்படுத்துகின்றது என்பதுதான் எனது செய்தி.
இன்று உலகம் ஒரு பூகோள கிராமகாம மாறியுள்ளது நடக்கும் சம்பவங்களை ஒரு கிராமத்துக்குள் ஒரு நாட்டின் எல்லைக்குள் வைத்து பார்கின்ற நிலை இல்லை, அப்படி எனக்கு பார்க்க முடியாது உலகில் என்ன நடந்தாலும் அதன் ஆரம்பம் அல்லது அதை இயக்கும் சக்தி உலகில் எங்காவது ஒரு இடத்தில் இருக்கின்றது அப்படியான ஒரு உலக ஒழுங்கில்தான் உலகம் இயங்குகின்றது அதன் காரணமாகத்தான் இவைகள நடக்கின்றது.
thanks to lankamuslim.org