Saturday, October 29, 2011


சிறுபான்மை மாணவர்களுக்கு சிங்கள பாடசாலைகளில் 20 வீத இட ஒதுக்கீட்டு !!


பிரபல பாடசாலைகள் தவிந்த சிங்கள பாடசாலைகளில் 20 வீதமான அனுமதியை தமிழ், முஸ்லிம் பிள்ளைகளுக்கு பெற்று கொடுப்பது குறித்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என ஜாதிக ஹெல உருமையவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்த தேரர் கூறினார் என்று நவமணி பத்திரிகை தெரிவிக்கின்றது.
அந்த பத்திரிகை தகவலில்  ஜாதிக ஹெல உருமைய தூதுக்குழுவுக்கும் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சிலுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையேயும் நல்லெண்ணத்தைக் கட்டி வளர்ப்பதற்கும் புரிந்துணர்வை ஏற்படுத்துவ தற்குமாக பிரபல பாடசாலைகள் தவிந்த சிங்கள பாடசாலைகளில் 20 வீதமான அனுமதியை தமிழ், முஸ்லிம் பிள்ளைகளுக்கு பெற்று கொடுப்பது குறித்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என ஜாதிக ஹெல உருமையவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்த தேரர் கூறினார்  என்று தெரிவிக்கின்றது.
மேலும் சமூகங்களுக்கிடையே நல்லெண்ணத்தைக் கட்டி எழுப்பும் நோக்கில் ஹெல உருமயவின் அழைப்பின் பேரில் கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை பற்றி முஸ்லிம் கவுன்சில் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய அல்ஹாஜ் என்.எம்.அமீன் எடுத்துக்கூறிய போதே ஜாதிக ஹெல உருமையவின் பாராளுமன்ற உறுப்பினர் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்துக்கு கல்வி வாய்ப்புக்கள் குறைவாகவுள்ளன முஸ்லிம்களது பல்கலைக்கழக அனுமதி 5 வீதமாகவே உள்ளது அதுவும் கூடுதலாக கலைப் பீடங்களுக்கே தெரிவாகின்றனர். கொழும்பு மாநகரிலுள்ள முஸ்லிம்களது கல்வி நிலை மிக மோசமாகவுள்ளது. கொழும்பிலிருந்து ஒரு சிலரே பல்கலைக் கழகம் தெரிவாகின்றனர். சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம்களுக்கோ , தமிழர்களுக்கோ அனுமதி வழங்கப்படுவது மிக குறைவாகும். இந்த நிலையில் முஸ்லிம்களது கல்வி நிலை மோசமாகவுள்ளது. அரசாங்கத் தொழில் துறைகளிலும் 3 வீதமான முஸ்லிம்களே இருக்கிறார்கள். பார்க்கின்ற பார்வைக்கு முஸ்லிம்கள் பணக்காரச் சமூகம் போல் தென்பட்டாலும் வறியவர்களே கூடுதலாக உள்ளனர். கொழும்பு மாநகரிலுள்ள சேரிகளில் கூடுதலாக முஸ்லிம்களே வாழ்கின்றார்கள். கொழுப்பு பாடசாலைகளில் போதிய வசதிகளில்லாததால் முஸ்லிம் பிள்ளைகள் இடையில் கல்வியை கைவிட்டு பாதாள உலகுக்குச் செல்ல நிர்பந்திக்ககப்படுகின்றனர். இவர்களை சமூகவிரோதச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகி என முஸ்லிம் கவுன்சில் தலைவர் தனது அறிமுக உரையில் எடுத்து விளக்கினார் .
முஸ்லிம்கள் தம் பிள்ளைகளை சிங்கள மொழியில் கற்பிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் .ஆனால் வாய்ப்புகள் வழங்கப் படுவதில்லை எனத் தூதுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கு சிங்கள மொழி மூலம் படித்த முஸ்லிம்களும் ,தமிழர்களும் சிங்கள கலாச்சாரத்தை மதிப்பதை காணுகிறோம் என அத்துரலிய ரத்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையே காணப்படும் சந்தேகங்களை அகற்றி புரிந்துணர்வையும் நல்லுறவையயும் கட்டியெழுப்புவதற்கான புதிய அணுகு முறையை கையாளுவதற்கு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. என்றும் இலங்கை முஸ்லிம் கவுன்சில் மேற்கொண்ட இந்தத் திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியேரத்ன தேரோ தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி முன் வந்துள்ளது என்று தினக்குரல் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் கொழும்பில் ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்,முஸ்லிம்,சிங்கள மூன்று தரப்பினரும் மாதாந்தம் கூடிய பிரச்சினைகளை சுமுகமாக ஆராய்ந்து தீர்வு காண்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது சந்திப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் நடத்துவதெனவும் இதற்கு மூவினத்தையும் சார்ந்த புத்திஜீவிகள் மற்றும் பிரமுகர்களை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டச் சந்திப்பின் போது சிறுபான்மைச் சமூகத்தவரின் கல்வி நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது என்று தெரிவித்தது.
lankamuslim.org

No comments:

Post a Comment