Thursday, May 19, 2011

குவைட் அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழில் ஏழு அரச கட்டிடங்கள்

குவைட் அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழில் ஏழு அரச கட்டிடங்கள்

குவைட் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழப்பாணத்தில் சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள ஏழு அரச கட்டிடங்களை அமைச்சர் ஜோன் செனவிரத்ன நாளை திறந்து வைக்கவுள்ளார். யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசத்தில் குறித்த நிர்மாணங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று எமது lankamuslim.org யாழ் செய்தியாளர் தெரிவித்தார்.
அமைச்சர் ஜோன் செனவிரத்ன, 20 ஆம் திகதி இவற்றை திறந்து வைக்கவுள்ளார் என்று அறிய முடிகின்றது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச கட்டிடங்களில் உடுவில் பிரதேச செயலகம், பருத்தித்துறை பிரதேச செயலக விடுதி, யாழ்ப்பாணம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விடுமுறை விடுதியும் உள்ளடங்குவதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
thanks to lankamuslim.org .

No comments:

Post a Comment