Saturday, May 14, 2011

பேருவளையில் ஜமாஅதே இஸ்லாமியின் இஜ்திமா

பேருவளையில் ஜமாஅதே இஸ்லாமியின் இஜ்திமா


தகவல் அஸ்ரப் யூசுப்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் வருடந்தோறும் நடைபெறும் இஜ்திமாக்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன இம்முறையும் நாடளாவிய ரீதியில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ஜமாஅதே இஸ்லாமி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அந்த தொடரில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி களுத்துறை உபபிராந்தியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இஜ்திமா எதிர் வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை “அறிவியல் உலகை மூடி இருக்கும் அறியாமை இருள் ” என்ற கருப்பொருளில்  பேருவளை சீனம் கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையில் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை இடம்பெறவுள்ளது விரிவாக
அந்த நிகழ்வில் ‘வஹியின் ஒளியில் அறிவியல்’ என்ற தலைப்பில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களும் ‘அறியாமை ஒரு வழிகேடு’ என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் H.M மின்ஹாஜ்-இஸ்லாஹியும் ‘இன்றைய சமூகத்தில் அறியாமையினால் சமூகத்தில் காணப்படும் பிரதிபலிப்புகள் ‘ என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் ஹுஸைர் இஸ்லாஹியும் சிறப்புரையாற்றவுள்ளனர்  பெண்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மற்றும் நூல்களை பெற்றுக்கொள்ளும் ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment